குர்ஆன் 31:13 — லுக்மான்
லுக்மான் தன்னுடைய மகனிடம், அவருக்கு உபதேசம் செய்தவராக, “என் மகனே, கடவுள்-உடன் இணைத்தெய்வங்கள் எதனையும் அமைத்துக் கொள்ளாதே; இணைத்தெய்வ வழிபாடு மிகப்பெரியதோர் அநீதியாகும்”* என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[31:12] லுக்மானிற்கு நாம் ஞானத்தைக் கொடையளித் தோம்: “நீர் கடவுள்-க்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும்”. எவரொருவர் நன்றியுடைய வராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார். நன்றிகெட்டவர்களாக மாறிவிட்டவர் களைப் பொறுத்த வரை, கடவுள் எந்தத் தேவையு மற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
[31:14] தன்னுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்து மாறு மனிதனுக்கு நாம் கட்டளையிட்டோம். அவன் தாய் அவனைச் சுமந்தாள், மேலும் அந்தச் சுமை கனத்துடன் மேலும் கனம் கூடிக்கொண்டே சென்றது. பால்குடி மறக்கச் செய்யப்படும் வரை அதற்கு இரண்டு வருடங்கள்( தீவிர கவனம் ) எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கின்றது. நீங்கள் எனக்கும் மேலும் உங்களுடைய பெற்றோர்களுக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இறுதிவிதி என் வசமே உள்ளது.