குர்ஆன் 31:14 — லுக்மான்
தன்னுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்து மாறு மனிதனுக்கு நாம் கட்டளையிட்டோம். அவன் தாய் அவனைச் சுமந்தாள், மேலும் அந்தச் சுமை கனத்துடன் மேலும் கனம் கூடிக்கொண்டே சென்றது. பால்குடி மறக்கச் செய்யப்படும் வரை அதற்கு இரண்டு வருடங்கள்( தீவிர கவனம் ) எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கின்றது. நீங்கள் எனக்கும் மேலும் உங்களுடைய பெற்றோர்களுக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இறுதிவிதி என் வசமே உள்ளது.
[31:13] லுக்மான் தன்னுடைய மகனிடம், அவருக்கு உபதேசம் செய்தவராக, “என் மகனே, கடவுள்-உடன் இணைத்தெய்வங்கள் எதனையும் அமைத்துக் கொள்ளாதே; இணைத்தெய்வ வழிபாடு மிகப்பெரியதோர் அநீதியாகும்”* என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[31:15] என்னுடன் ஏதேனும் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ள அவர்கள் உம்மை நிர்பந்திக்க முயற்சித்தால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். ஆனால் தொடர்ந்து அவர்களை இவ்வுலகில் நல்ல முறையில் நடத்துவீராக. எனக்கு அடிபணிந்தோருடைய பாதையை மட்டும் நீர் பின்பற்ற வேண்டும். இறுதியாக, நீங்கள் அனைவரும் என்னிடம் திரும்புவீர்கள், பின்னர் நான் உங்களுக்கு நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அறிவிப்பேன்.