Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:29 — லுக்மான்

கடவுள் இரவைப் பகலினுள் ஒன்று சேர்க்கின்றார் மேலும் பகலை இரவினுள் ஒன்று சேர்க்கின்றார் என்பதையும், மேலும் சூரியனையும் சந்திரனையும் உங்களுடைய பணிக்கென ஆக்கியிருக்கின்றார் என்பதையும், ஒவ்வொன்றும் அதன் சுற்றுப் பாதையில் குறிப்பிடப்பட்டதொரு வாழ்க்கைத் தவணைக்கென ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும், மேலும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

[31:28] உங்கள் அனைவருடைய படைப்பும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலும் ஒரு நபருடையதைப் போன்றதேயாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

[31:30] இது கடவுள் தான் சத்தியம் என்பதையும், அதே சமயம் அவருடன் அவர்கள் அமைத்துக்கொள் கின்ற எந்த இணைத்தெய்வமும் பொய்மையே யாகும் என்பதையும், மேலும் கடவுள் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர் என்பதையும் நிரூபிக்கின்றது.