குர்ஆன் 31:28 — லுக்மான்
உங்கள் அனைவருடைய படைப்பும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலும் ஒரு நபருடையதைப் போன்றதேயாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
[31:27] பூமியின் மீதுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களாக ஆக்கப்பட்டாலும், மேலும் பெருங்கடல் மையை வழங்கினாலும், இன்னும் அது ஏழு பெருங்கடல்கள் கொண்டு அதிகரிக்கப் பட்டாலும், கடவுள்-ன் வார்த்தைகள் தீர்ந்து போய்விடாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[31:29] கடவுள் இரவைப் பகலினுள் ஒன்று சேர்க்கின்றார் மேலும் பகலை இரவினுள் ஒன்று சேர்க்கின்றார் என்பதையும், மேலும் சூரியனையும் சந்திரனையும் உங்களுடைய பணிக்கென ஆக்கியிருக்கின்றார் என்பதையும், ஒவ்வொன்றும் அதன் சுற்றுப் பாதையில் குறிப்பிடப்பட்டதொரு வாழ்க்கைத் தவணைக்கென ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும், மேலும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?