குர்ஆன் 31:27 — லுக்மான்
பூமியின் மீதுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களாக ஆக்கப்பட்டாலும், மேலும் பெருங்கடல் மையை வழங்கினாலும், இன்னும் அது ஏழு பெருங்கடல்கள் கொண்டு அதிகரிக்கப் பட்டாலும், கடவுள்-ன் வார்த்தைகள் தீர்ந்து போய்விடாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[31:26] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிகுந்த புகழுக்குரியவர்.
[31:28] உங்கள் அனைவருடைய படைப்பும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலும் ஒரு நபருடையதைப் போன்றதேயாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.