குர்ஆன் 31:26 — லுக்மான்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிகுந்த புகழுக்குரியவர்.
[31:25] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்”, என அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. இருப்பினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[31:27] பூமியின் மீதுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களாக ஆக்கப்பட்டாலும், மேலும் பெருங்கடல் மையை வழங்கினாலும், இன்னும் அது ஏழு பெருங்கடல்கள் கொண்டு அதிகரிக்கப் பட்டாலும், கடவுள்-ன் வார்த்தைகள் தீர்ந்து போய்விடாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.