குர்ஆன் 31:30 — லுக்மான்
ذٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الحَقُّ وَأَنَّ ما يَدعونَ مِن دونِهِ البٰطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ العَلِىُّ الكَبيرُ
இது கடவுள் தான் சத்தியம் என்பதையும், அதே சமயம் அவருடன் அவர்கள் அமைத்துக்கொள் கின்ற எந்த இணைத்தெய்வமும் பொய்மையே யாகும் என்பதையும், மேலும் கடவுள் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர் என்பதையும் நிரூபிக்கின்றது.
[31:29] கடவுள் இரவைப் பகலினுள் ஒன்று சேர்க்கின்றார் மேலும் பகலை இரவினுள் ஒன்று சேர்க்கின்றார் என்பதையும், மேலும் சூரியனையும் சந்திரனையும் உங்களுடைய பணிக்கென ஆக்கியிருக்கின்றார் என்பதையும், ஒவ்வொன்றும் அதன் சுற்றுப் பாதையில் குறிப்பிடப்பட்டதொரு வாழ்க்கைத் தவணைக்கென ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும், மேலும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[31:31] அவருடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காட்டுவதற்காக, கடவுள்-ன் வாழ்வாதாரங்களைச் சுமந்து கொண்டு, கப்பல்கள் கடலில் சுற்றித் திரிவதை நீங்கள் பார்க்க வில்லையா? உண்மையில், உறுதிப்பாடும், நன்றியும் உடைய ஒவ்வொருவருக்கும் இவை போதிய சான்றுகளாக இருக்க வேண்டும்.