குர்ஆன் 31:5 — லுக்மான்
அவர்கள் தங்கள் இரட்சகரிடமிருந்து வந்த வழிகாட்டலைப் பின்பற்றுகின்றனர், மேலும் அவர்களே வெற்றியாளர்கள்.
[31:4] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.
[31:6] மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ஹதீஸ்களை, விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.