குர்ஆன் 31:7 — லுக்மான்
மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப் பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒருபோதும் கேளாததைப் போலவும் அவனது காதுகள் செவிடானதைப் போலவும், ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலிநிறைந்ததொரு தண்டனை யை அவனுக்கு வாக்களிப்பீராக.
[31:6] மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ஹதீஸ்களை, விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.
[31:8] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர் பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.