குர்ஆன் 31:8 — லுக்மான்
நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர் பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[31:7] மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப் பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒருபோதும் கேளாததைப் போலவும் அவனது காதுகள் செவிடானதைப் போலவும், ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலிநிறைந்ததொரு தண்டனை யை அவனுக்கு வாக்களிப்பீராக.
[31:9] நிரந்தரமாக அங்கு அவர்கள் தங்கியிருப்பார்கள். இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதியாகும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.