குர்ஆன் 32:12 — சிர வணக்கம்
குற்றவாளிகள் தங்களுடைய இரட்சகரின் முன் அவர்களுடைய தலைகளைக் குனிந்து கொண்டு இருக்கும்போது மட்டும் அவர்களை நீர் காணமுடிந்தால்: “ எங்கள் இரட்சகரே, இப்போது நாங்கள் பார்த்துவிட்டோம் மேலும் கேட்டு விட்டோம். எங்களைத் திருப்பி அனுப்பு வீராக, அப்போது நாங்கள் நன்னெறியாளர் களாக இருப்போம். இப்போது நாங்கள் உறுதிப்பாட்டை அடைந்து விட்டோம்.”*
[32:11] “உங்களுக்கெனப் பொறுப்பேற்றுள்ள அந்த வானவரால் நீங்கள் மரணத்தில் ஆழ்த்தப் படுவீர்கள், பின்னர் உங்கள் இரட்சகரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்,”என்று கூறுவீராக.
[32:13] நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஆன்மா விற்கும் அதனுடைய வழிகாட்டலை நம்மால் கொடுத்திருக்க இயலும், ஆனால் ஜின்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நரகத்தை நான் நிரப்புவேன் என்பது முன்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.*