குர்ஆன் 32:13 — சிர வணக்கம்
நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஆன்மா விற்கும் அதனுடைய வழிகாட்டலை நம்மால் கொடுத்திருக்க இயலும், ஆனால் ஜின்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நரகத்தை நான் நிரப்புவேன் என்பது முன்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.*
[32:12] குற்றவாளிகள் தங்களுடைய இரட்சகரின் முன் அவர்களுடைய தலைகளைக் குனிந்து கொண்டு இருக்கும்போது மட்டும் அவர்களை நீர் காணமுடிந்தால்: “ எங்கள் இரட்சகரே, இப்போது நாங்கள் பார்த்துவிட்டோம் மேலும் கேட்டு விட்டோம். எங்களைத் திருப்பி அனுப்பு வீராக, அப்போது நாங்கள் நன்னெறியாளர் களாக இருப்போம். இப்போது நாங்கள் உறுதிப்பாட்டை அடைந்து விட்டோம்.”*
[32:14] இந்த நாளை நீங்கள் மறந்துவிட்டதன் விளைவு களைச் சுவையுங்கள்; இப்போது நாம் உங்களை மறந்து விட்டோம். உங்களுடைய சொந்தச் செயல்களுக்குப் பிரதிபலனாக நிரந்தரமான தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.