குர்ஆன் 32:14 — சிர வணக்கம்
இந்த நாளை நீங்கள் மறந்துவிட்டதன் விளைவு களைச் சுவையுங்கள்; இப்போது நாம் உங்களை மறந்து விட்டோம். உங்களுடைய சொந்தச் செயல்களுக்குப் பிரதிபலனாக நிரந்தரமான தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.
[32:13] நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஆன்மா விற்கும் அதனுடைய வழிகாட்டலை நம்மால் கொடுத்திருக்க இயலும், ஆனால் ஜின்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நரகத்தை நான் நிரப்புவேன் என்பது முன்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.*
[32:15] உண்மையாகவே நமது வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட ஒரே மக்கள் யாரென்றால், அவற்றைச் செவிமடுக்கும் போது சிரம்பணிந்து விழுபவர்களேயாவர். அவர்கள் எந்த ஆணவமும் இன்றி, தங்கள் இரட்சகரைத் துதிக்கவும் மேலும் புகழவும் செய்கின்றனர்.