குர்ஆன் 32:15 — சிர வணக்கம்
உண்மையாகவே நமது வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட ஒரே மக்கள் யாரென்றால், அவற்றைச் செவிமடுக்கும் போது சிரம்பணிந்து விழுபவர்களேயாவர். அவர்கள் எந்த ஆணவமும் இன்றி, தங்கள் இரட்சகரைத் துதிக்கவும் மேலும் புகழவும் செய்கின்றனர்.
[32:14] இந்த நாளை நீங்கள் மறந்துவிட்டதன் விளைவு களைச் சுவையுங்கள்; இப்போது நாம் உங்களை மறந்து விட்டோம். உங்களுடைய சொந்தச் செயல்களுக்குப் பிரதிபலனாக நிரந்தரமான தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.
[32:16] பயபக்தி மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக, தங்களுடைய இரட்சகரை வழிபடுவதற்காக, அவர்களுடைய விலாப்புறங்கள், முழு மனதுடன் அவர்களுடைய படுக்கைகளைத் துறக்கும், மேலும் நம்முடைய வாழ்வாதாரங்களில் அவர்களுக் குரியதில் இருந்து அவர்கள் தர்மம் செய்வார்கள்.