குர்ஆன் 32:16 — சிர வணக்கம்
பயபக்தி மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக, தங்களுடைய இரட்சகரை வழிபடுவதற்காக, அவர்களுடைய விலாப்புறங்கள், முழு மனதுடன் அவர்களுடைய படுக்கைகளைத் துறக்கும், மேலும் நம்முடைய வாழ்வாதாரங்களில் அவர்களுக் குரியதில் இருந்து அவர்கள் தர்மம் செய்வார்கள்.
[32:15] உண்மையாகவே நமது வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட ஒரே மக்கள் யாரென்றால், அவற்றைச் செவிமடுக்கும் போது சிரம்பணிந்து விழுபவர்களேயாவர். அவர்கள் எந்த ஆணவமும் இன்றி, தங்கள் இரட்சகரைத் துதிக்கவும் மேலும் புகழவும் செய்கின்றனர்.
[32:17] உங்களுடைய (நன்னெறியான) காரியங்களுக்கு வெகுமதியாக எவ்வளவு ஆனந்தமும் மகிழ்ச்சியும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாது.