Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:19 — அணியினர்

அத்துடன், அவர்கள் உம்முடன், நடந்து கொள்ளும்போது கஞ்சத்தனமாகவும் நடந்து கொள்கின்றனர். சமூகத்தை ஏதேனும் அச்சுறுத்தினால், மரணம் அவர்களிடம் ஏற்கெனவே வந்து விட்டதைப் போல், அவர் களுடைய கண்கள் அச்சத்தால் உருளுவதை நீங்கள் காண்கின்றீர்கள். ஆபத்தான நிலை நீங்கி விட்டால், உடனே அவர்கள் கூரிய நாவுகளால் உங்களைச் சாடுகின்றனர். தங்களுடைய செல்வத்தில் அவர்கள் மிகவும் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றனர். இவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல, மேலும், அதன் விளைவாகக், கடவுள் அவர்களுடைய காரியங்களை பயனற்றதாக ஆக்கி விட்டார். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[33:18] உங்களில் இடையூறு செய்பவர்களையும், மேலும் தங்களுடைய சகாக்களிடம் “ நாம் அனைவரும் பின்தங்கியிருந்து விடுவோம்,” என்று கூறுபவர்க ளையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அரிதாகவே அவர்கள் தற்காப்பிற்காகப் புறப்படுகின்றனர்.

[33:20] படையினர் திரும்பிவரக் கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படி நடந்திருந்தால், அவர்கள் பாலைவனத்தில் தொலைந்து போனவர்களாகி, உங்களைப் பற்றிய செய்திகளை வெகுதொலை விலிருந்து கேட்டுக் கொண்டிருக்கவேண்டுமென அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுது படையினர் உங்களைத் தாக்கியிருந்தால், அவர்கள் அரிதாகவே உங்க ளுக்கு ஆதரவளிப்பார்கள்.