Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:30 — அணியினர்

வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, உங்களில் எவரேனும் ஒரு பெரும்பாவத்தைச் செய்வீர்களாயின், அவருக்குரிய தண்டனை இரட்டிப்பாக்கப்படும். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[33:29] “ஆனால் நீங்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும், மேலும் மறுவுலகின் வீட்டையும் தேடுபவர்களாக இருந்தால், பின்னர் உங்களில் உள்ள நன்னெறியாளர்களுக்கு மகத்தான தொரு பிரதிபலனைக் கடவுள் தயார் செய்துள்ளார்”.

[33:31] உங்களில் எவரொருவர் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவருக்குப் பிரதிபலனை நாம் இருமடங்காக வழங்குவோம், மேலும் தாராளமானதொரு வாழ்வாதாரத்தையும் அவருக்காக நாம் தயார் செய்துள்ளோம்.