Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:31 — அணியினர்

உங்களில் எவரொருவர் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவருக்குப் பிரதிபலனை நாம் இருமடங்காக வழங்குவோம், மேலும் தாராளமானதொரு வாழ்வாதாரத்தையும் அவருக்காக நாம் தயார் செய்துள்ளோம்.

[33:30] வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, உங்களில் எவரேனும் ஒரு பெரும்பாவத்தைச் செய்வீர்களாயின், அவருக்குரிய தண்டனை இரட்டிப்பாக்கப்படும். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[33:32] வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களாயின் (உங்களுக்கு அதிகமானதொரு பொறுப் புள்ளது). நீங்கள் மற்ற எந்தப் பெண்களையும் போன்றவர்கள் அல்ல. ஆகையால், தங்களுடைய இதயங்களில் நோய் உடையவர்கள் தவறான எண்ணங்கள் கொள்ளாதிருக்கும் பொருட்டு, நீங்கள் மிகவும் மெதுவாகப் பேச வேண்டாம்; நன்னெறிகளை மட்டுமே நீங்கள் பேச வேண்டும்.