Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:32 — அணியினர்

வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களாயின் (உங்களுக்கு அதிகமானதொரு பொறுப் புள்ளது). நீங்கள் மற்ற எந்தப் பெண்களையும் போன்றவர்கள் அல்ல. ஆகையால், தங்களுடைய இதயங்களில் நோய் உடையவர்கள் தவறான எண்ணங்கள் கொள்ளாதிருக்கும் பொருட்டு, நீங்கள் மிகவும் மெதுவாகப் பேச வேண்டாம்; நன்னெறிகளை மட்டுமே நீங்கள் பேச வேண்டும்.

[33:31] உங்களில் எவரொருவர் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவருக்குப் பிரதிபலனை நாம் இருமடங்காக வழங்குவோம், மேலும் தாராளமானதொரு வாழ்வாதாரத்தையும் அவருக்காக நாம் தயார் செய்துள்ளோம்.

[33:33] நீங்கள் உங்களுடைய வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், மேலும் பழைய அறியாமை நாட்களில் நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் போல், மக்களுடன் அளவிற்கதிகமாகக் கலக்காதீர்கள். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். புனித ஆலயத்தைச் சுற்றி வசிப்பவர்களே, கடவுள் உங்களிடமிருந்து அனைத்துத் தீமைகளையும் நீக்கவும், மேலும் உங்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தவுமே விரும்புகின்றார்.