Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:37 — அணியினர்

கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்டு மேலும் உம்மால் அரவணைக்கப்பட்ட ஒருவரிடம் நீர் “உம்முடைய மனைவியைத் தக்கவைத்துக் கொள்வீராக மேலும் கடவுள்-ஐ அஞ்சிக்கொள் வீராக” என்று கூறியதை நினைவு கூர்வீராக, மேலும் கடவுள் அறிவிக்க நாடியதை உமக்குள் ளேயே நீர் மறைத்துக் கொண்டீர். இவ்விதமாக, கடவுள்-ஐ மட்டுமே அஞ்ச வேண்டியவராக நீர் இருக்கும் பொழுது, நீர் மக்களுக்கு அஞ்சினீர். ஒரு மனிதன் தன்னுடைய தத்துப்பிள்ளையின் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ளலாம் என்ற முன்மாதிரியை நிலைநாட்டுவதற்காக, ஜைது தன்னுடைய மனைவியை விட்டு முழுமையாக நீங்கிக் கொண்டு விட்ட பின்னர், அவளை நாம் உமக்கு மணம் செய்வித்தோம். கடவுள்-ன் கட்டளை கள் செய்துமுடிக்கப்படவேண்டும்.

[33:36] கடவுள்-ம் அவருடைய தூதரும் ஏதேனும் கட்டளையைப் பிறப்பித்து விட்டால், நம்பிக்கை கொண்ட ஆணிற்கோ அல்லது நம்பிக்கை கொண்ட பெண்ணிற்கோ, அந்தக் கட்டளை குறித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எதுவும் கிடையாது. கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியாத எவர் ஒருவரும் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டார்.

[33:38] கடவுள்-ஆல் சட்டபூர்வமானதாக்கப்பட்ட எந்த விஷயத்தையும் செய்வதன் மூலம் வேதம் வழங்கப்பட்டவர், ஒரு தவறைச் செய்துவிடு வதில்லை. ஆரம்பகாலத் தலைமுறைகள் முதல் கடவுள்-ன் வழிமுறை இவ்வாறாகவே இருக் கின்றது. கடவுள்-ன் கட்டளை புனிதமான தொரு கடமையாக இருக்கின்றது.