குர்ஆன் 33:48 — அணியினர்
நம்பமறுப்பவர்களுக்கும் மேலும் நயவஞ்சகர் களுக்கும் கீழ்ப்படியாதீர், அவர்களுடைய அவமதிப்புகளை புறக்கணித்து விடுவீராக, மேலும் உம்முடைய பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.
[33:47] கடவுள்-இடமிருந்து மகத்தானதொரு அருட் கொடைக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர் என்ற நற்செய்தியை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குவீராக.
[33:49] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்துவிட்டு, பின்னர் பாலியலுறவு கொள்வதற்கு முன்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்கள் (மற்றொரு மனிதரை திருமணம் செய்வதற்கு முன்னர்) உங்களுக்கான காத்திருக்கும் தவணை எதையும் கடமைப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அவர் களுக்கு நியாயமான நஷ்ட ஈடு அளிக்கவும், மேலும் அவர்கள் இணக்கத்துடன் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.