குர்ஆன் 33:49 — அணியினர்
நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்துவிட்டு, பின்னர் பாலியலுறவு கொள்வதற்கு முன்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்கள் (மற்றொரு மனிதரை திருமணம் செய்வதற்கு முன்னர்) உங்களுக்கான காத்திருக்கும் தவணை எதையும் கடமைப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அவர் களுக்கு நியாயமான நஷ்ட ஈடு அளிக்கவும், மேலும் அவர்கள் இணக்கத்துடன் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.
[33:48] நம்பமறுப்பவர்களுக்கும் மேலும் நயவஞ்சகர் களுக்கும் கீழ்ப்படியாதீர், அவர்களுடைய அவமதிப்புகளை புறக்கணித்து விடுவீராக, மேலும் உம்முடைய பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.
[33:50] வேதம் வழங்கப்பட்டவரே, நீர் எவர்களுக்கு வரதட்சணை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை, அல்லது கடவுள்-ஆல் உமக்கு வழங்கியுள்ளவாறு, ஏற்கனவே நீர் கொண்டிருப்பவர்களை உமக்கு நாம் சட்டபூர்வமாக்கியுள்ளோம்.அத்துடன் உம்முடன் குடிபெயர்ந்து, வந்த உம் தந்தையின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தந்தையின் சகோதரிகளுடைய மகள்களும், உம் தாயின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தாயின் சகோதரிகளுடைய மகள்களும், உமக்கு சட்டபூர்வமானவர்களே ஆவார்கள். அத்துடன், நம்பிக்கை கொண்ட ஒரு பெண் வேதம் வழங்கப்பட்டவருக்கு - வரதட்சணையை விட்டுக் கொடுப்பதன் மூலம்-தன்னையே கொடுத்தால் அவரும் அதை விரும்பினால், ஒரு வரதட்சணையு மின்றி வேதம் வழங்கப்பட்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆயினும் , அவள் வரதட்சணையை விட்டுக் கொடுப்பது என்பது வேதம் வழங்கப் பட்டவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகுமே அன்றி, மற்ற நம்பிக்கையாளர் களுக்கல்ல. அவர்களுடைய வாழ்க்கைத் துணைகள் அல்லது அவர்கள் ஏற்கெனவே கொண்டிருப்பவர்கள் சம்பந்தமாக அவர்களுடைய உரிமைகளை நாம் ஏற்கெனவே விதித்துள்ளோம். இது உம்மை எந்தச் சங்கடத்திலிருந்தும் விடுவிப் பதற்காகவேயாகும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.