குர்ஆன் 33:50 — அணியினர்
வேதம் வழங்கப்பட்டவரே, நீர் எவர்களுக்கு வரதட்சணை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை, அல்லது கடவுள்-ஆல் உமக்கு வழங்கியுள்ளவாறு, ஏற்கனவே நீர் கொண்டிருப்பவர்களை உமக்கு நாம் சட்டபூர்வமாக்கியுள்ளோம்.அத்துடன் உம்முடன் குடிபெயர்ந்து, வந்த உம் தந்தையின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தந்தையின் சகோதரிகளுடைய மகள்களும், உம் தாயின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தாயின் சகோதரிகளுடைய மகள்களும், உமக்கு சட்டபூர்வமானவர்களே ஆவார்கள். அத்துடன், நம்பிக்கை கொண்ட ஒரு பெண் வேதம் வழங்கப்பட்டவருக்கு - வரதட்சணையை விட்டுக் கொடுப்பதன் மூலம்-தன்னையே கொடுத்தால் அவரும் அதை விரும்பினால், ஒரு வரதட்சணையு மின்றி வேதம் வழங்கப்பட்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆயினும் , அவள் வரதட்சணையை விட்டுக் கொடுப்பது என்பது வேதம் வழங்கப் பட்டவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகுமே அன்றி, மற்ற நம்பிக்கையாளர் களுக்கல்ல. அவர்களுடைய வாழ்க்கைத் துணைகள் அல்லது அவர்கள் ஏற்கெனவே கொண்டிருப்பவர்கள் சம்பந்தமாக அவர்களுடைய உரிமைகளை நாம் ஏற்கெனவே விதித்துள்ளோம். இது உம்மை எந்தச் சங்கடத்திலிருந்தும் விடுவிப் பதற்காகவேயாகும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[33:49] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்துவிட்டு, பின்னர் பாலியலுறவு கொள்வதற்கு முன்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்கள் (மற்றொரு மனிதரை திருமணம் செய்வதற்கு முன்னர்) உங்களுக்கான காத்திருக்கும் தவணை எதையும் கடமைப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அவர் களுக்கு நியாயமான நஷ்ட ஈடு அளிக்கவும், மேலும் அவர்கள் இணக்கத்துடன் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.
[33:51] அவர்களில் எவர் ஒருவரையும் நீர் கடுமையின்றி விலக்கி வைக்கலாம், மேலும் நீர் அவர்களில் எவர் ஒருவரையும் உம்மிடம் நெருக்கமாகக் கொண்டு வரலாம். நீர் பிணையறுத்துக் கொண்ட எவர் ஒருவருடனும் நீர் சமாதானம் செய்து கொண்டால், நீர் குற்றமெதுவும் செய்யவில்லை. இந்தச் செயல் முறையில், அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், கவலையெதுவும் கொள்ளாதிருப்பார்கள், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீதமாக நீர் வழங்குப வற்றைக் கொண்டு திருப்தியடைவார்கள். உங்கள் இதயங்களில் உள்ளவற்றைக் கடவுள் அறிகின் றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்க முடையவர்.