குர்ஆன் 33:60 — அணியினர்
நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோயுடையவர்களும், மேலும் நகரத்தின் ஒழுக்கம் கெட்ட பொய்யர்களும் (உங்களைத் துன்புறுத்துவதிலிருந்து) விலகிக் கொண்டா லே தவிர, நிச்சயமாக நாம் உம் கரத்தை மேலோங்கச் செய்வோம், பின்னர் சிறிதொரு காலத்திற்குள் அவர்கள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவர்.
[33:59] வேதம் வழங்கப்பட்டவரே, உம்முடைய மனைவி யரிடமும், உம்முடைய மகள்களிடமும் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியரிடமும் அவர்கள் தங்களுடைய ஆடைகளை நீளப் படுத்திக்கொள்ளும்படி கூறுவீராக. இவ்வித மாக, அவர்கள் (நன்னெறியுடைய பெண்க ளென) அடையாளம் காணப்படுவார்கள். மேலும் அவமதிக்கப்படுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்வார்கள். கடவுள் மன்னிப்பவர். மிக்க கருணையாளர்.
[33:61] அவர்கள் எங்கு சென்றபோதிலும், அவர்கள் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; (உங்களைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தினாலன்றி,) அவர்கள் பிடிக்கப்படலாம் மேலும் கொல்லப்படலாம்.