குர்ஆன் 33:7 — அணியினர்
(முஹம்மதே) நீர் உட்பட,வேதம் வழங்கப் பட்டவர்களிடம் அவர்களுடைய உடன் படிக்கையை நாம் எடுத்ததை நினைவு கூர்வீராக, நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் மேரியின் மகனான இயேசு. அவர்களிடமிருந்து பயபக்தியுடன் கூடிய ஒரு வாக்குறுதியை* நாம் எடுத்தோம்.
[33:6] இந்த வேதம் வழங்கப்பட்டவர் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் ஒருவர் மற்றவருடன் இருப்பதை விடவும் மிகவும் நெருக்கமானவர் ஆவார், மேலும் அவருடைய மனைவியர் அவர் களுக்குத் தாய்மார்களைப் போன்றவர்கள் ஆவர். கடவுள்-ன் வேதத்திற்கு இணங்க உறவினர்கள் ஒருவர் மற்றவரிடம் அக்கறை எடுத்துக் கொண்டாக வேண்டும். இவ்விதமாக, நம்பிக்கையாளர்கள் முதலில் தங்களுடைய சொந்தக் குடும்பத்தினர் மீது கவனம் எடுத்துக் கொண்டுவிட்டு, தங்களிடம் குடி பெயர்ந்து வரும் தங்களுடைய உறவினர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இந்த வேதத்தின் கட்டளைகளாகும்.
[33:8] அதன்பின்னர், உண்மையாளர்களிடம் அவர் களுடைய உண்மைத்தன்மை குறித்து அவர் நிச்சயம் விசாரிப்பார், மேலும் (இந்த குர்ஆனிய உண்மையை) நம்பமறுப்பவர்களுக்கு வலி நிறைந்ததொரு தண்டனையைத் தயார் செய்துள்ளார்.