குர்ஆன் 33:8 — அணியினர்
அதன்பின்னர், உண்மையாளர்களிடம் அவர் களுடைய உண்மைத்தன்மை குறித்து அவர் நிச்சயம் விசாரிப்பார், மேலும் (இந்த குர்ஆனிய உண்மையை) நம்பமறுப்பவர்களுக்கு வலி நிறைந்ததொரு தண்டனையைத் தயார் செய்துள்ளார்.
[33:7] (முஹம்மதே) நீர் உட்பட,வேதம் வழங்கப் பட்டவர்களிடம் அவர்களுடைய உடன் படிக்கையை நாம் எடுத்ததை நினைவு கூர்வீராக, நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் மேரியின் மகனான இயேசு. அவர்களிடமிருந்து பயபக்தியுடன் கூடிய ஒரு வாக்குறுதியை* நாம் எடுத்தோம்.
[33:9] நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடையை நினைவில் கொள்ளுங்கள்; படைவீரர்கள் உங்களைத் தாக்கிய பொழுது, அவர்கள் மீது உக்கிரமான காற்றையும் மேலும் கண்ணுக்குத் தெரியாத படைவீரர்களையும் நாம் அனுப்பினோம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்க்கின்றார்.