குர்ஆன் 33:6 — அணியினர்
النَّبِىُّ أَولىٰ بِالمُؤمِنينَ مِن أَنفُسِهِم ۖ وَأَزوٰجُهُ أُمَّهٰتُهُم ۗ وَأُولُوا الأَرحامِ بَعضُهُم أَولىٰ بِبَعضٍ فى كِتٰبِ اللَّهِ مِنَ المُؤمِنينَ وَالمُهٰجِرينَ إِلّا أَن تَفعَلوا إِلىٰ أَولِيائِكُم مَعروفًا ۚ كانَ ذٰلِكَ فِى الكِتٰبِ مَسطورًا
இந்த வேதம் வழங்கப்பட்டவர் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் ஒருவர் மற்றவருடன் இருப்பதை விடவும் மிகவும் நெருக்கமானவர் ஆவார், மேலும் அவருடைய மனைவியர் அவர் களுக்குத் தாய்மார்களைப் போன்றவர்கள் ஆவர். கடவுள்-ன் வேதத்திற்கு இணங்க உறவினர்கள் ஒருவர் மற்றவரிடம் அக்கறை எடுத்துக் கொண்டாக வேண்டும். இவ்விதமாக, நம்பிக்கையாளர்கள் முதலில் தங்களுடைய சொந்தக் குடும்பத்தினர் மீது கவனம் எடுத்துக் கொண்டுவிட்டு, தங்களிடம் குடி பெயர்ந்து வரும் தங்களுடைய உறவினர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இந்த வேதத்தின் கட்டளைகளாகும்.
[33:5] உங்களுடைய தத்துப்பிள்ளைகளுக்கு, அவர் களுடைய மரபுவழிப் பெற்றோர்களுடனான அவர்களுடைய உறவைப் பாதுகாக்கும் வண்ணம் நீங்கள் பெயரிட வேண்டும். கடவுள் -ன் பார்வையில் இதுவே மிகவும் நீதமான தாகும். அவர்களுடைய பெற்றோர்களை நீங்கள் அறியாவிட்டால், பின்னர், உங்களு டைய மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், அவர்களை நீங்கள் உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களைப் போல் நடத்திட வேண்டும். இவ்விஷயத்தில் நீங்கள் ஒரு தவறு செய்து விட்டால், நீங்கள் பாவம் ஒன்றைச் செய்து விடவில்லை; வேண்டுமென்றே செய்யப்படும் உங்களுடைய செயல் திட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[33:7] (முஹம்மதே) நீர் உட்பட,வேதம் வழங்கப் பட்டவர்களிடம் அவர்களுடைய உடன் படிக்கையை நாம் எடுத்ததை நினைவு கூர்வீராக, நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் மேரியின் மகனான இயேசு. அவர்களிடமிருந்து பயபக்தியுடன் கூடிய ஒரு வாக்குறுதியை* நாம் எடுத்தோம்.