குர்ஆன் 33:71 — அணியினர்
அப்போது அவர் உங்களுடைய காரியங்களை உறுதிப்படுத்துவார், மேலும் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்தவர்கள் மகத்தானதொரு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டார்கள்.
[33:70] நம்பிக்கை கொண்டோரே, கடவுள் இடம் பயபக்தியோடிருங்கள், மேலும் சரியான கூற்றுக்களை மட்டுமே கூறுங்கள்.
[33:72] வானங்களுக்கும், பூமிக்கும், மற்றும் மலை களுக்கும் (தேர்ந்தெடுக்கும் சுதந்திரமெனும்) பொறுப்பை, நாம் முன்வைத்தோம், ஆனால் அவை அதனைச் சுமந்து கொள்ள மறுத்தன, மேலும் அதனைக் குறித்து அஞ்சியவை களாகவும் இருந்தன. ஆனால் மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். அவன் வரம்புமீறுகின்றவனாகவும், அறிவில்லாதவனாகவும் இருந்தான்.*