குர்ஆன் 34:18 — ஷீபா
அவர்களுக்கும் நாம் அருள்பாலித்திருந்த சமூகங்களுக்குமிடையில் வேறு பாலைவனச் சோலைகளை நாம் அமைத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் பயணத்தை நாம் பாதுகாப்பானதாக ஆக்கினோம்: “இரவுகளிலும் பகல்களிலும் முழுமையான பாதுகாப்புடன் அதில் நீங்கள் பயணம் செய்யுங்கள்”.
[34:17] இவ்விதமாக அவர்களுடைய நம்பிக்கை யின்மைக்காக அவர்களை நாம் பழிதீர்த்தோம். நம்ப மறுப்பவர்களை மட்டுமே நாம் பழிதீர்க்கின் றோம் அல்லவா?
[34:19] ஆனால் அவர்கள் (நன்றி கெட்டவர்களாக மாறினார்கள், மேலும்): “எங்கள் இரட்சகரே, (நிறுத்தங்கள் எதுவுமின்றி) எங்கள் பயணங்களின் தூரத்தை நீர் அதிகரித்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என்று சவால் விட்டார்கள். இவ்விதமாக அவர்கள் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதி இழைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்களை நாம் சரித்திரமாக ஆக்கினோம், மேலும் பூமி எங்கிலும் சிறுசிறு சமூகங்களாக அவர்களை நாம் சிதறடித்தோம். உறுதியுடையவர்களாகவும், மேலும் நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையை வழங்க வேண்டும்.