Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:23 — ஷீபா

அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருந்தாலே யன்றி, அவரிடம் பரிந்துரை என்பது வீணானதே ஆகும். இறுதியில் அவர்களுடைய மனங்கள் அமைதியடைந்தவுடன் அவர்கள், “உங்களு டைய இரட்சகர் என்ன கூறினார்” என்று கேட்கின்றார்கள். அவர்கள், “சத்தியம்” என்று கூறுவார்கள். அவர் தான் மிக உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.

[34:22] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண் டிருக்கும் அந்த இணைத் தெய்வங்களை இறைஞ்சுங்கள். வானங்களிலோ, அல்லது பூமியிலோ ஒரே ஓர் அணுவின் அளவு கூட அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்க வில்லை. அதில் எந்தப் பங்கும் அவர்களுக்கு உரியதில்லை, அன்றி அவர்களை அவருடைய உதவியாளர்களாக இருக்கவும் அவர் அனுமதிப்பதில்லை” என்று கூறுவீராக.

[34:24] “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்?” என்று கூறுவீராக. “கடவுள்” என்றும், மேலும் “வழி நடத்தப்பட்டவர்கள் அல்லது வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டவர்கள் நாங்களா அல்லது நீங்களா” என்றும் கூறுவீராக.