குர்ஆன் 34:22 — ஷீபா
“கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண் டிருக்கும் அந்த இணைத் தெய்வங்களை இறைஞ்சுங்கள். வானங்களிலோ, அல்லது பூமியிலோ ஒரே ஓர் அணுவின் அளவு கூட அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்க வில்லை. அதில் எந்தப் பங்கும் அவர்களுக்கு உரியதில்லை, அன்றி அவர்களை அவருடைய உதவியாளர்களாக இருக்கவும் அவர் அனுமதிப்பதில்லை” என்று கூறுவீராக.
[34:21] அவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இவ்விதமாக மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருப் பவர்களை, அதனைப்* பற்றி சந்தேகம் கொண்டிருப் பவர்களிலிருந்து நாம் வேறுபடுத்திக் காட்டுகின் றோம். உம் இரட்சகர் அனைத்துப் பொருட் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.
[34:23] அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருந்தாலே யன்றி, அவரிடம் பரிந்துரை என்பது வீணானதே ஆகும். இறுதியில் அவர்களுடைய மனங்கள் அமைதியடைந்தவுடன் அவர்கள், “உங்களு டைய இரட்சகர் என்ன கூறினார்” என்று கேட்கின்றார்கள். அவர்கள், “சத்தியம்” என்று கூறுவார்கள். அவர் தான் மிக உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.