Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:27 — ஷீபா

“அவருடன் பங்குதாரர்களாக நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் இணைத் தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள்!” என்று கூறுவீராக, “அல்ல; அவர்தான் ஒரே கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறுவீராக.

[34:26] “நம்முடைய இரட்சகர் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர் முன்னால் ஒன்று திரட்டுவார், பின்னர் நமக்கிடையில் அவர் நீதமாகத் தீர்ப்பளிப்பார். அவர்தான் நீதிபதி, எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.

[34:28] எல்லா மக்களுக்கும் நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப் பவராகவும் (ரஷாதே)* உம்மை நாம் அனுப்பியுள்ளோம், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.