குர்ஆன் 34:3 — ஷீபா
நம்ப மறுப்பவர்கள், “அந்த நேரம் ஒருபோதும் நிகழாது!” என்று கூறினார்கள். “நிச்சயமாக- என் இரட்சகர் மீது ஆணையாக - மிகவும் உறுதியாக அது உங்களிடம் வரும். அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர். ஓர் அணுவின் எடைக்குச் சமமானது கூட அவருக்கு மறைவானதாக இல்லை, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அதனை விடச் சிறியதோ அல்லது பெரியதோ கூட (மறைவானதில்லை). அனைத்தும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது,” என்று கூறுவீராக.
[34:2] பூமிக்குள் செல்லும் ஒவ்வொன்றையும், மற்றும் அதிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றையும், மேலும் வானத்திலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், மற்றும் அதில் ஏறும் ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். அவர்தான் மிக்க கருணையாளர், மன்னிப்பவர்.
[34:4] மிகவும் உறுதியாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து பவர்களுக்கு அவர் வெகுமதியளிப்பார். அவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் தாராளமான தொரு வாழ்வாதாரத்திற்கும் தகுதியாகி விட்டனர்.