Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:2 — ஷீபா

பூமிக்குள் செல்லும் ஒவ்வொன்றையும், மற்றும் அதிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றையும், மேலும் வானத்திலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், மற்றும் அதில் ஏறும் ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். அவர்தான் மிக்க கருணையாளர், மன்னிப்பவர்.

[34:1] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றிற்கும் உரியவரான கடவுள்-க்கே புகழ் அனைத்தும் உரியது; அத்துடன் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்கே உரித்தானது. அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.

[34:3] நம்ப மறுப்பவர்கள், “அந்த நேரம் ஒருபோதும் நிகழாது!” என்று கூறினார்கள். “நிச்சயமாக- என் இரட்சகர் மீது ஆணையாக - மிகவும் உறுதியாக அது உங்களிடம் வரும். அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர். ஓர் அணுவின் எடைக்குச் சமமானது கூட அவருக்கு மறைவானதாக இல்லை, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அதனை விடச் சிறியதோ அல்லது பெரியதோ கூட (மறைவானதில்லை). அனைத்தும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது,” என்று கூறுவீராக.