Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:33 — ஷீபா

பின்பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நீங்கள்தான் இரவும் பகலும் சூழ்ச்சி செய்தீர் கள், அதன் பின்னர் கடவுள்-க்கு நன்றி கெட்டவர்களாக இருக்குமாறும், மேலும் அவருடன் சமமாக இணைத் தெய்வங்களை அமைத்துக்கொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டீர்கள்” என்று கூறுவார்கள். தண்டனையை அவர்கள் காணும் பொழுது, அவர்கள் குற்றவுணர்வால் வருத்தப்படுவார் கள், ஏனெனில் நம்ப மறுப்பவர்களின் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளை நாம் அமைத்து விடுவோம். அவர்கள் செய்த வற்றிற்காக அவர்கள் நியாயமாகத்தான் கூலி கொடுக்கப்படுகின்றனர் அல்லவா?

[34:32] தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம், “வழிகாட்டுதலிலிருந்து, அது உங்களிடம் வந்ததன் பின்னர் நாங்களா உங்களை வேறு வழியில் திருப்பினோம்? அல்ல; நீங்கள் தான் தீயவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார் கள்.

[34:34] ஒரு சமூகத்திற்கு ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய ஒவ்வொரு முறையும், அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “உம்முடன் அனுப்பப்பட்ட தூதுச் செய்தியை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.