குர்ஆன் 34:32 — ஷீபா
قالَ الَّذينَ استَكبَروا لِلَّذينَ استُضعِفوا أَنَحنُ صَدَدنٰكُم عَنِ الهُدىٰ بَعدَ إِذ جاءَكُم ۖ بَل كُنتُم مُجرِمينَ
தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம், “வழிகாட்டுதலிலிருந்து, அது உங்களிடம் வந்ததன் பின்னர் நாங்களா உங்களை வேறு வழியில் திருப்பினோம்? அல்ல; நீங்கள் தான் தீயவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார் கள்.
[34:31] நம்பமறுப்பவர்கள், “நாங்கள் இந்தக் குர்ஆனிலோ அன்றி முந்திய வேதங்களிலோ நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள். இந்த வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் நிற்கின்ற போது உம்மால் மட்டும் அவர்களை பார்க்க முடிந்தால்! அவர்கள் ஒருவர் மற்றவருடன் முன்னும் பின்னும் தர்க்கித்துக் கொள்வார்கள். பின்பற்றியவர்கள் தங்களுடைய தலைவர் களிடம், “நீங்கள் மட்டும் இல்லாதிருந்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந் திருப்போம்” என்று கூறுவார்கள்.
[34:33] பின்பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நீங்கள்தான் இரவும் பகலும் சூழ்ச்சி செய்தீர் கள், அதன் பின்னர் கடவுள்-க்கு நன்றி கெட்டவர்களாக இருக்குமாறும், மேலும் அவருடன் சமமாக இணைத் தெய்வங்களை அமைத்துக்கொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டீர்கள்” என்று கூறுவார்கள். தண்டனையை அவர்கள் காணும் பொழுது, அவர்கள் குற்றவுணர்வால் வருத்தப்படுவார் கள், ஏனெனில் நம்ப மறுப்பவர்களின் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளை நாம் அமைத்து விடுவோம். அவர்கள் செய்த வற்றிற்காக அவர்கள் நியாயமாகத்தான் கூலி கொடுக்கப்படுகின்றனர் அல்லவா?