Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:31 — ஷீபா

நம்பமறுப்பவர்கள், “நாங்கள் இந்தக் குர்ஆனிலோ அன்றி முந்திய வேதங்களிலோ நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள். இந்த வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் நிற்கின்ற போது உம்மால் மட்டும் அவர்களை பார்க்க முடிந்தால்! அவர்கள் ஒருவர் மற்றவருடன் முன்னும் பின்னும் தர்க்கித்துக் கொள்வார்கள். பின்பற்றியவர்கள் தங்களுடைய தலைவர் களிடம், “நீங்கள் மட்டும் இல்லாதிருந்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந் திருப்போம்” என்று கூறுவார்கள்.

[34:30] “உங்களால் ஒரு மணி நேரம் தாமதப் படுத்தவோ அல்லது முற்படுத்தவோ இயலாத, குறிப்பிட்டதொரு நேரம், குறிப்பிட்டதொரு நாள் உங்களுக்கு உள்ளது” என்று கூறுவீராக.

[34:32] தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம், “வழிகாட்டுதலிலிருந்து, அது உங்களிடம் வந்ததன் பின்னர் நாங்களா உங்களை வேறு வழியில் திருப்பினோம்? அல்ல; நீங்கள் தான் தீயவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார் கள்.