குர்ஆன் 34:36 — ஷீபா
“என் இரட்சகர் தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் கொடுக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்” என்று கூறுவீராக.
[34:35] அத்துடன் அவர்கள், “அதிகமான செல்வத்துடனும் மற்றும் பிள்ளைகளுடனும், நாங்கள் அதிக சக்தியுடையவர்களாக இருக்கின்றோம், மேலும் நாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம்” என்றும் கூறினார்கள்.
[34:37] உங்களுடைய பணமோ அல்லது உங்களுடைய பிள்ளைகளோ உங்களை நம்மிடம் நெருக்க மாகக் கொண்டு வருவதில்லை. நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வை நடத்துபவர்கள் மட்டுமே தங்களுடைய காரியங்களுக்குரிய வெகுமதியை, பன்மடங் காகப் பெருக்கிப் பெற்றுக் கொள்வார்கள். சுவன வீட்டில் அவர்கள் பூரணமான அமைதியுடன் வசிப்பார்கள்.