குர்ஆன் 34:38 — ஷீபா
நமது வெளிப்பாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டனையில் தங்கியிருப்பார்கள்.
[34:37] உங்களுடைய பணமோ அல்லது உங்களுடைய பிள்ளைகளோ உங்களை நம்மிடம் நெருக்க மாகக் கொண்டு வருவதில்லை. நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வை நடத்துபவர்கள் மட்டுமே தங்களுடைய காரியங்களுக்குரிய வெகுமதியை, பன்மடங் காகப் பெருக்கிப் பெற்றுக் கொள்வார்கள். சுவன வீட்டில் அவர்கள் பூரணமான அமைதியுடன் வசிப்பார்கள்.
[34:39] “என் இரட்சகர்தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் அதிகரிக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார். (கடவுள் நிமித்தம்) எந்த ஒன்றை நீங்கள் செலவிட்டாலும், அதற்காக அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்; வழங்கு பவர்களில் அவர்தான் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.