Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:39 — ஷீபா

“என் இரட்சகர்தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் அதிகரிக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார். (கடவுள் நிமித்தம்) எந்த ஒன்றை நீங்கள் செலவிட்டாலும், அதற்காக அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்; வழங்கு பவர்களில் அவர்தான் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.

[34:38] நமது வெளிப்பாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டனையில் தங்கியிருப்பார்கள்.

[34:40] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், வானவர்களிடம் அவர், “இந்த மக்கள் உங்களை வழிபட்டார்களா?” என்று கூறுவார்.