குர்ஆன் 34:42 — ஷீபா
அந்நாளில், நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யவோ, அல்லது தீங்கிழைக்கவோ சக்தி எதுவும் பெற்றிருக்க மாட்டீர்கள். மேலும் வரம்பு மீறியவர்களிடம் நாம், “நீங்கள் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் தண்டனை யைச் சுவையுங்கள்” என்று கூறுவோம்.
[34:41] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர். நீரே எங்கள் இரட்சகரும் எஜமானருமாவீர், அவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஜின்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர்; அவர்களில் அதிகமானோர் அவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்” என்று பதிலளிப்பார்கள்.
[34:43] முற்றிலும் தெளிவான, நமது சான்றுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட போது, அவர்கள், “இவர் உங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பாதையை விட்டு உங்களைத் திருப்பி விட விரும்புகின்ற வெறும் மனிதர் தான்” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “இவை இட்டுக்கட்டப் பட்ட பொய்களாகும்” என்றும் கூறினார்கள். தங்களிடம் வந்த சத்தியத்தைப் பற்றி நம்பிக்கை கொள்ள மறுத்தவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமாகும்” என்றும் கூட கூறினார்கள்.