குர்ஆன் 34:41 — ஷீபா
அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர். நீரே எங்கள் இரட்சகரும் எஜமானருமாவீர், அவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஜின்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர்; அவர்களில் அதிகமானோர் அவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்” என்று பதிலளிப்பார்கள்.
[34:40] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், வானவர்களிடம் அவர், “இந்த மக்கள் உங்களை வழிபட்டார்களா?” என்று கூறுவார்.
[34:42] அந்நாளில், நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யவோ, அல்லது தீங்கிழைக்கவோ சக்தி எதுவும் பெற்றிருக்க மாட்டீர்கள். மேலும் வரம்பு மீறியவர்களிடம் நாம், “நீங்கள் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் தண்டனை யைச் சுவையுங்கள்” என்று கூறுவோம்.