குர்ஆன் 34:43 — ஷீபா
முற்றிலும் தெளிவான, நமது சான்றுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட போது, அவர்கள், “இவர் உங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பாதையை விட்டு உங்களைத் திருப்பி விட விரும்புகின்ற வெறும் மனிதர் தான்” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “இவை இட்டுக்கட்டப் பட்ட பொய்களாகும்” என்றும் கூறினார்கள். தங்களிடம் வந்த சத்தியத்தைப் பற்றி நம்பிக்கை கொள்ள மறுத்தவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமாகும்” என்றும் கூட கூறினார்கள்.
[34:42] அந்நாளில், நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யவோ, அல்லது தீங்கிழைக்கவோ சக்தி எதுவும் பெற்றிருக்க மாட்டீர்கள். மேலும் வரம்பு மீறியவர்களிடம் நாம், “நீங்கள் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் தண்டனை யைச் சுவையுங்கள்” என்று கூறுவோம்.
[34:44] படிப்பதற்கு வேறு எந்தப்புத்தகத்தையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை, அன்றி உமக்கு முன்னர் வேறொரு எச்சரிப்பவரையும் அவர்களுக்கு நாம் அனுப்பவுமில்லை.