குர்ஆன் 34:44 — ஷீபா
படிப்பதற்கு வேறு எந்தப்புத்தகத்தையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை, அன்றி உமக்கு முன்னர் வேறொரு எச்சரிப்பவரையும் அவர்களுக்கு நாம் அனுப்பவுமில்லை.
[34:43] முற்றிலும் தெளிவான, நமது சான்றுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட போது, அவர்கள், “இவர் உங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பாதையை விட்டு உங்களைத் திருப்பி விட விரும்புகின்ற வெறும் மனிதர் தான்” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “இவை இட்டுக்கட்டப் பட்ட பொய்களாகும்” என்றும் கூறினார்கள். தங்களிடம் வந்த சத்தியத்தைப் பற்றி நம்பிக்கை கொள்ள மறுத்தவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமாகும்” என்றும் கூட கூறினார்கள்.
[34:45] அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் இந்தத் தலைமுறை யினருக்கு நாம் கொடுத்துள்ள (அற்புதத்தில்) பத்தில்* ஒன்றைக் கூட அவர்கள் கண்டிராத போதிலும், என் தூதர்களை அவர்கள் நம்ப மறுத்தபோது, என்னுடைய தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!