குர்ஆன் 34:45 — ஷீபா
அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் இந்தத் தலைமுறை யினருக்கு நாம் கொடுத்துள்ள (அற்புதத்தில்) பத்தில்* ஒன்றைக் கூட அவர்கள் கண்டிராத போதிலும், என் தூதர்களை அவர்கள் நம்ப மறுத்தபோது, என்னுடைய தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!
[34:44] படிப்பதற்கு வேறு எந்தப்புத்தகத்தையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை, அன்றி உமக்கு முன்னர் வேறொரு எச்சரிப்பவரையும் அவர்களுக்கு நாம் அனுப்பவுமில்லை.
[34:46] “ஒரு விஷயத்தைச் செய்யும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்: இருவர் இருவராகவோ அல்லது தனித்தவர்களாகவோ, கடவுள்-க்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், பின்னர் சிந்தியுங்கள். உங்களுடைய தோழர் (ரஷாத்) ஒரு கிறுக்கர் அல்ல. அவர் பயங்கரமானதொரு தண்டனையின் வருகைக்குச் சற்று முன்னர், உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவரேயாவார்,” என்று கூறுவீராக.