குர்ஆன் 34:46 — ஷீபா
“ஒரு விஷயத்தைச் செய்யும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்: இருவர் இருவராகவோ அல்லது தனித்தவர்களாகவோ, கடவுள்-க்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், பின்னர் சிந்தியுங்கள். உங்களுடைய தோழர் (ரஷாத்) ஒரு கிறுக்கர் அல்ல. அவர் பயங்கரமானதொரு தண்டனையின் வருகைக்குச் சற்று முன்னர், உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவரேயாவார்,” என்று கூறுவீராக.
[34:45] அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் இந்தத் தலைமுறை யினருக்கு நாம் கொடுத்துள்ள (அற்புதத்தில்) பத்தில்* ஒன்றைக் கூட அவர்கள் கண்டிராத போதிலும், என் தூதர்களை அவர்கள் நம்ப மறுத்தபோது, என்னுடைய தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!
[34:47] “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க வில்லை; நீங்களே அதனை வைத்துக் கொள்ளுங்கள் . எனது கூலி கடவுள்-இடமிருந்து மட்டுமே வருகின்றது. அனைத்து விஷயங்களுக்கும் அவர் சாட்சியாக இருக்கின்றார்” என்று கூறுவீராக.