Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:7 — ஷீபா

நம்ப மறுப்பவர்கள் கூறினார்கள், “நீங்கள் வெவ்வேறாகக் கிழிந்து போன பின்னர், நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களிடம் கூறுகின்ற ஒரு மனிதரை நாங்கள் உங்களுக்குக் காட்டட்டுமா.

[34:6] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர்களுக்கு உம் இரட்சகரிடமிருந்து உமக்கு வந்துள்ள இந்த வெளிப்பாடு சத்தியம் என்பதும், மேலும் சர்வ வல்லமையுடைய, மிக்க புகழுக்குரியவரின் பாதையை நோக்கி இது வழிநடத்துகின்றது என்பதும் வெளிப்படை யானதாகும்.

[34:8] “ஒன்று, கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார், அல்லது அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவராக இருக்கின்றார்.” உண்மையில், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மோசமான தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டனர்.