குர்ஆன் 35:10 — துவக்குபவர்
கண்ணியத்தைத் தேடும் எவர் ஒருவரும் அனைத்துக் கண்ணியமும் கடவுள்-க்குரியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்ல வார்த்தைகள் அவரிடம் மேலேறிச் செல்கின்றன, மேலும் நன்னெறியான காரியங்களை அவர் உயர்த்துகின்றார். தீய காரியங்களைச் சூழ்ச்சி செய்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்; இத்தகைய மக்களின் சூழ்ச்சிகள் தோல்வியுறும் என விதிக்கப் பட்டுள்ளது.
[35:9] கடவுள் தான் மேகங்களைக் கலைப்பதற்காகக் காற்றுகளை அனுப்புகின்றவர், பின்னர் அவற்றைத் தரிசு நிலங்களின் பால் நாம் ஓட்டுகின்றோம், மேலும் அத்தகைய நிலங்களை, அவை இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் இவ்விதமான தேயாகும்.
[35:11] தூசியிலிருந்தும், பின்னர் ஒரு சிறு துளியி லிருந்தும் கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் மூலமாக உங்களை இனப்பெருக்கம் செய்யச் செய் கின்றார். அவர் அறிந்திடாமல், எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அன்றிப் பிரசவிப்பதோ இல்லை. முன்னரே இருக்கின்ற ஒரு பதிவேட்டிற்கு ஏற்பவே அன்றி எவர் ஒருவரும் ஒரு நீண்ட வாழ்வு வாழ்வதில்லை, மேலும் எவர் ஒருவருடைய வாழ்வும் குறுகியதாக மாற்றப்படுவதுமில்லை. இது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.