Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:9 — துவக்குபவர்

கடவுள் தான் மேகங்களைக் கலைப்பதற்காகக் காற்றுகளை அனுப்புகின்றவர், பின்னர் அவற்றைத் தரிசு நிலங்களின் பால் நாம் ஓட்டுகின்றோம், மேலும் அத்தகைய நிலங்களை, அவை இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் இவ்விதமான தேயாகும்.

[35:8] ஒருவனுடைய தீய காரியங்கள், அவை நன்னெறி யானவை தான் என்று அவன் எண்ணிக் கொள்ளும் அளவிற்கு, அவனுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்ட ஒருவனை கவனித்துப் பார்ப்பீராக. இவ்விதமாக (வழிதவறிச்செல்ல) நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் (வழிகாட்டப் பட்டவராக இருக்க) நாடுவோரை அவர் வழிநடத்துகின்றார். ஆகையால், அவர்களுக்காகத் துக்கப்படாதீர். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[35:10] கண்ணியத்தைத் தேடும் எவர் ஒருவரும் அனைத்துக் கண்ணியமும் கடவுள்-க்குரியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்ல வார்த்தைகள் அவரிடம் மேலேறிச் செல்கின்றன, மேலும் நன்னெறியான காரியங்களை அவர் உயர்த்துகின்றார். தீய காரியங்களைச் சூழ்ச்சி செய்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்; இத்தகைய மக்களின் சூழ்ச்சிகள் தோல்வியுறும் என விதிக்கப் பட்டுள்ளது.