Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:12 — துவக்குபவர்

இரு கடல்களும் ஒரே மாதிரியானவை அல்ல; ஒன்று புதிதாகவும் மேலும் மதுரமாகவும் இருக் கின்றது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும் மேலும் அருந்த இயலாததாகவும் உள்ளது. அவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் மிருதுவான இறைச்சியை உண்ணுகின்றீர்கள், மேலும் அணிவதற்கு ஆபரணங்களைப் பிரித்தெடுத்துக் கொள்கின்றீர்கள். மேலும் அவருடைய வாழ் வாதாரங்களைத் தேடியவாறு, கப்பல்கள் அவற்றினூடே சவாரி செய்வதை நீங்கள் பார்க்கின் றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருந்து கொள்ளுங்கள்.

[35:11] தூசியிலிருந்தும், பின்னர் ஒரு சிறு துளியி லிருந்தும் கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் மூலமாக உங்களை இனப்பெருக்கம் செய்யச் செய் கின்றார். அவர் அறிந்திடாமல், எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அன்றிப் பிரசவிப்பதோ இல்லை. முன்னரே இருக்கின்ற ஒரு பதிவேட்டிற்கு ஏற்பவே அன்றி எவர் ஒருவரும் ஒரு நீண்ட வாழ்வு வாழ்வதில்லை, மேலும் எவர் ஒருவருடைய வாழ்வும் குறுகியதாக மாற்றப்படுவதுமில்லை. இது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[35:13] அவர் பகலிற்குள் இரவை ஒன்று சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலை ஒன்று சேர்க்கின்றார். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கால அளவிற்கு ஓடும்படியாக சூரியனையும் மற்றும் சந்திரனையும் அவர் பணித்துள்ளார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; அரசுரிமை அனைத்தும் அவருக்குரியது. அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் எந்த இணைத்தெய்வமும் ஒரு விதையின் ஓட்டளவிற்குக் கூட சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை.